Thursday, 5 April 2018

விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 3 | Vidukathaigal | Riddles

1)மொட்டை மாடு உட்கார்ந்திருக்குது; மூக்கணாங்கயிறு மேய்ந்து வருது. அது என்ன?
2)சின்னச் சின்னச் சாத்தான்,வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்?
3)தட்டுப் போல் இருக்கும் - அதில் சொட்டுத் தண்ணிர் ஒட்டாது. அது என்ன?
4)கழுத்தை வெட்டினால் கண் தெரியும். அது என்ன?
5)பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு. பல்லிலே பட்டால் கண்ணிலே நீர். அது என்ன?
6)வெள்ளைக் குதிரைக்குப் பச்சை வால். அது என்ன?
7)மரம் ஏறினால் வழுக்கும்;காய் தின்றால் துவர்க்கும்; பழம் தின்றால் இனிக்கும். அது என்ன?
8)ஒ ஓ அண்ணா, உயர்ந்த அண்ணா, தோளிலே என்ன தொண்ணுறு முடிச்சு. அது என்ன?
9)ஜாடி மேலே குரங்கு. அது என்ன?
10)பெட்டியைத் திறந்தேன் கிருஷ்ணன் பிறந்தான். அவன் யார்?
11)உச்சியிலே குடுமி உண்டு; மனிதனல்ல. உருண்டையான வடிவம் உண்டு; முட்டையல்ல. நீர்ததும்பி நிறைந்திருக்கும்; குளமும் அல்ல. நெற்றியிலே கண் இருக்கும்; சிவனும் அல்ல. அது என்ன?
12)ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பச்சைப் பாம்பு தொங்குது. அது என்ன?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


விடுகதைகள் (விடை மற்றும் படங்களுடன்) பகுதி 2 | Vidukathaigal | Riddles


1)மண்ணுக்குள்ளே இருக்கும் மாயாண்டி,உரிக்க உரிக்கத் தோலாண்டி. அது என்ன?
2)உச்சிக் கிளையிலே ஒரு முழக் குச்சி ஊசலாடுது. அது என்ன?
3)வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணிர். அது என்ன?
4)மஞ்சள் சட்டை மாப்பிள்ளை மண மணக்கிறார் வீட்டிலே. அது என்ன?
5)பட்டையைப் பட்டையை நீக்கி,பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி. அது என்ன?
6)ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி. அது என்ன?
7)பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா. அது என்ன?
8)இரவிலே பிறந்த இளவரசனுக்குத்   தலையிலே குடை. அது என்ன?
9)ஈரப் புடவைக்காரி   இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. அவள் யார்?
10)சூரியன் காணாத கங்கை;சுண்ணம் தோற்கும் வெள்ளை;மண்ணிற் பண்ணாத பாண்டம். அது என்ன?
11)ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?


மேலே உள்ள விடுகதைகளின் விடைகளை படங்களுடன் தெரிந்து கொள்ள இந்த வீடியோவ பாருங்க..


கிழங்கு வகைகள் (படங்களுடன்)


அறுசுவை உணவுகளும் அதன் நன்மை மற்றும் தீமைகளும் | Six Taste


விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள் 

விவசாயம் பற்றிய பழமொழிகளின் விளக்கங்கள்     பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு ந...